பௌத்த சமய காலத்தில் விகாரங்களும் வர பல்கலைக்கழகங்களும்

 தட்சசீலம்

பண்டைய இந்திய நகரமாக இருந்த தட்சசீலம் தற்போது வடமேற்கு பாகிஸ்தானில் உள்ளது. இது ஒரு முக்கியமான தொல்பொருள் ஆராய்ச்சிப் பகுதியாகும். இதனை 1980இல் யுனெஸ்கோ, உலக பாரம்பரியத் தளமாக அறிவித்தது. சாணக்கியர், தனது அர்த்தசாஸ்திரத்தை இப்பல்கலைக்கழகத்தில் தங்கியிருந்து தொகுத்ததாக கூறப்படுவது இதன் சிறப்பாகும். 19ஆம் நூற்றாண்டின் மத்தியில் இப்பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அலெக்சாண்டர் கன்னிங்காம் கண்டுபிடித்தார்.

பௌத்த சமய காலத்தில் விகாரங்களும் வர பல்கலைக்கழகங்களும்

நாளந்தா

பண்டைய காலத்தில் நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி.(பொ.ஆ.) 5ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. (பொ.ஆ.) 12ஆம் நூற்றாண்டு வரை கற்றலின் மையமாக இருந்தது. தற்போதைய பீகாரில் உள்ள ராஜகிருகத்தில் அமைந்துள்ள நாளந்தா பல்கலைக்கழகம் உலகின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். நாளந்தா  மகா விகாராவின் இடிபாடுகளை ஐ.நா. சபையின் யுனெஸ்கோ (UNESCO) நிறுவனம் உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது. தற்போது புதுப்பிக்கப்பட்டுள்ள நாளந்தா பல்கலைக்கழகம் நாகரிகங்களுக்கிடையிலான தொடர்பு மையமாக கருதப்படுகிறது.

இந்தியக் கல்விக் கொள்கைகள் 

1854 - சர் சார்லஸ் வுட் கல்வி அறிக்கை - ஆங்கிலக் இந்தியாவில் கல்வியின் "மகாசாசனம்".

1882 - ஹண்டர் கல்விக்குழு - தொடக்கக் கல்வி

1935 - இந்திய அரசுச் சட்டம் - மாகாண சுயாட்சி

1937 - வார்தா கல்வித் திட்டம் - அடிப்படைக் கல்வித் திட்டம் - காந்தியடிகள்

1944 - கல்வி மேம்பாடு - சார்ஜண்ட் அறிக்கை

1948 - பல்கலைக்கழக கல்வி குறித்த அறிக்கை - டாக்டர் இராதாகிருஷ்ணன் கல்விக்குழு

1964 - டாக்டர் D.S, கோத்தாரி - 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் இலவச மற்றும் கட்டாய தொடக்க கல்வியையும் நாடு முழுவதும் ஒரே மாதிரியான 10 + 2 + 3 கல்வி அமைப்பு

1968 - முதலாவது தேசியக் கல்விக் கொள்கை

1976ஆம் ஆண்டு டிசம்பர் வரை கல்வித்துறை மாநிலப் பட்டியலில் இருந்தது. ஆனால் தற்போது கல்வித்துறை பொதுப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

1986 - இந்திய அரசு புதிய கல்விக் கொள்கை (1992 திருத்தியமைக்கப்பட்டது)

2000-01 - அனைவருக்கும் கல்வி இயக்கம் SSA அனைத்துக் குழந்தைகளும் தொடக்கக் கல்வி

சுதந்திரத்திற்குப் பின் தமிழகக் கல்வி

1975 - காந்திகிராம கிராமிய கல்லூரி 

1971-  தொலைதூரக் கல்வி

1956 -  பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் 

1982 -  சத்துணவுத் திட்டம் 


ManiMegala


கட்டுரையாளர் பற்றி: மணிமேகலை
நான் கடந்த 5 ஆண்டுகளாக கல்வி சார்ந்த வலைப்பதிவுகளில் அனுபவம் பெற்றுள்ளேன். நானும் உங்களைப் போலவே இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகி, தேர்வுகளை எழுதி வருகிறேன்.
என்னுடன் இணையுங்கள்:
facebook  pinterest  youtube  whatsapp twitter instagram telegram

கருத்துரையிடுக

புதியது பழையவை