இந்தியக் குடியுரிமை
குடிமகன் (Citizen) - சிவிஸ் (Civis) என்னும் இலத்தீன் வார்த்தை - பொருள் ரோமாபுரியில் 'குடியிருப்பாளர்'.
இந்திய அரசியலமைப்பின் பகுதி II இல் 5 முதல் 11 வரையிலான விதிகள் இந்தியக் குடியுரிமை பற்றி குறிப்பிடுகிறது.
1955 ஆம் ஆண்டு இந்தியக் குடியுரிமைச் சட்டம், ஒருவர் இந்தியக் குடியுரிமையைப் பெறுதலையும், இழத்தலையும் பற்றி குறிப்பிடுகின்றது. ஒற்றைக் குடியுரிமையை நமக்கு வழங்குகிறது.
குடியுரிமை பெறுவதற்கான ஐந்து வழிமுறைகள்
- பிறப்பால் பெறுதல்
- வம்சாவளியால் பெறுதல்
- பதிவு செய்தல்
- இயல்பு குடியுரிமை
- பிரதேசங்கள் இணைப்பு மூலம் பெறுதல்
