பண்டைய தமிழகத்தின் பண்பாடுகள் பற்றிய காலவரிசை


பழங்கற்காலம்

காலம்: 20,00,000 ஆண்டுகள் முன்பு முதல் கி.மு.(பொ.ஆ.மு.) 8,000 வரை

பண்பாட்டுக் கூறு :

  • வேட்டையாடுதல், உணவுசேகரித்தல்
  • கைக்கோடரி, வெட்டுக்கருவி

இடைக்கற்காலம்

காலம்: கி.மு. (பொ.ஆ.மு.) 8,000 முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 1,300 வரை

பண்பாட்டுக் கூறு :

1.நுண்கற்கருவிகள்

2. தாவர உணவுகளைச் சேகரித்தல்

3. விலங்குகளையும், பறவைகளையும் வேட்டையாடுதல்

4. உலோகம் பற்றி இவர்களுக்குத் தெரியாது.

புதியகற்காலம்

காலம்: கி.மு.(பொ.ஆ.மு.) 2,000 முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 1,000 வரை

பண்பாட்டுக் கூறு :

  • மெருகேற்றப்பட்ட கற்கோடரிகள்
  • நுண்கற்கருவிகள்
  • விலங்குகளைப் பழக்குதல்
  • பயிரிடுதல்
  • குழுக்களின் பெருக்கம்
  • வேட்டையாடுவோர்- உணவு சேகரிப்போர், மேய்ச்சல் சமூகத்தினர் என இருவிதமான குழுக்களும் ஒரே சமயத்தில் வாழ்ந்தன

இரும்புக் காலம்

காலம்: கி.மு. (பொ.ஆ.மு.) 1,300 முதல் கி.மு. (பொ.ஆ.மு.) 300 வரை

பண்பாட்டுக் கூறு :

  • பெருங்கற்கால ஈமச்சடங்கு முறை
  • உணவு சேகரிப்போரும் மேய்ச்சல் சமூகத்தினரும் ஒரே சமயத்தில் வாழ்தல் 
  • குழுத் தலைவர் உருவாதல்
  • இரும்பின் பயன்பாடு அறிதல்
  • கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள், கருப்பு மட்பாண்டங்கள் உருவாக்குதல்
  • கைவினைத் திறன்களில் சிறப்பு நிபுணர்கள் உருவாகுதல் குயவர்கள், கொல்லர்கள்

பண்டைய வரலாற்று மற்றும் சங்ககாலம்

காலம்: கி.மு. (பொ.ஆ.மு.) 300 முதல் பொ.ஆ. 300 வரை

பண்பாட்டுக் கூறு :

  • இரும்புக் கால மரபுகளோடு சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் வளர்ச்சி, 
  • வீரர்களை வழிபடுதல்,
  • இலக்கிய மரபு, கடல்வழி வணிகம்.
பண்டைய தமிழகத்தின் பண்பாடுகள் பற்றிய காலவரிசை




ManiMegala


கட்டுரையாளர் பற்றி: மணிமேகலை
நான் கடந்த 5 ஆண்டுகளாக கல்வி சார்ந்த வலைப்பதிவுகளில் அனுபவம் பெற்றுள்ளேன். நானும் உங்களைப் போலவே இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகி, தேர்வுகளை எழுதி வருகிறேன்.
என்னுடன் இணையுங்கள்:
facebook  pinterest  youtube  whatsapp twitter instagram telegram

கருத்துரையிடுக

புதியது பழையவை