எல்லார்க்கும் வணக்கம் நண்பர்களே,
'கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு' என்றார் ஔவையார்.
நான் மணிமேகலா, உங்களுடன் படித்ததைப் பகிர்வதில் மகிழ்ச்சி.
தொன்மை, தனித்தன்மை, மொழிகளின் தாய், சொல்வளம், இலக்கிய இலக்கண வளம், சிந்தனை வளம், கலைவளம், பண்பாட்டுவளம்,அறிவியல்வளம் இவற்றுடன் பன்னாட்டு மொழியாக விளங்கும் தன்மையைப் பெற்றமொழியாக ஒளிர்வது நமது தாய்மொழியாம் தமிழே!
தமிழின் சிறப்பை நிலைக்கச் செய்வதும் மேலும் வளரச் செய்வதும் தமிழராகிய நமது கடமையாகும்.
- தமிழ் இலக்கணம் பற்றி அறிய எளிய முறையில் படங்களுடன் முழு விளக்கங்களும்,
- தமிழ் இலக்கியம் தொடர்பான சிந்தனைகளும்,
- சமய முன்னோடிகள் வரலாறும் கருத்தும்,
- தமிழ் சான்றோர்கள் தொண்டும் பண்பாடும்
ஆகிய செய்திகளை நினைவு கூர்க வலைப்பதிவில் பகிர்ந்து உள்ளேன். தமிழைப் பற்றி தெரிந்ததும்,தெரியாததும் இங்கே கற்றுக் கொள்ளலாம்.
இவ்வலை பதிவானது TNPSC - குரூப் 2/ 2A,குரூப் 4/VAO- Group Exam எழுதுவோர் பயன்பெற வேண்டி சமச்சீர்க் கல்வி பாடப்புத்தகத்திலிருந்து எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
படித்ததை நினைவுகூர்க.
உங்களிடம் ஏதேனும் வினவல்கள், பரிந்துரை, கருத்துகள் இருந்தால் அல்லது வணக்கம் சொல்ல விரும்பினால், தயவுசெய்து பின்வரும் முகவரியில் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்.