இந்தியாவின் முதன்மை பெண்மணிகள்
1. முதல் மகளிர் பல்கலைக்கழகம் மகர்ஷிகார்வே 1916இல் ஐந்து மாணவிகளுடன் புனேவில் SNDT பல்கலைக்கழகத்தைத் தொடங்கினார்.
2. மத்திய அமைச்சரவையில் பதவி வகித்த முதல் பெண் விஜயலட்சுமி பண்டிட்.
3. மத்திய வெளியுறவு அமைச்சர் பதவியை வகித்த முதல் பெண் சுஷ்மா ஸ்வராஜ்.
4. மாநிலத்தின் இளம் வயது அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் அவர் 25 வயதாக இருந்தபோது ஹரியானா அமைச்சரவையில் அமைச்சரானார்.
5. சுதந்திர இந்தியாவின் முதல் பெண் ஆளுநர் சரோஜினி நாயுடு, ஒன்றிணைந்த மாகாணங்களின் பொறுப்பாளர் ஆனார்.
6. ஐக்கிய நாடுகளின் பொது சபையில் முதல் பெண் தலைவர் விஜயலட்சுமி பண்டிட் (1953).
7.இந்தியாவில் முதல் பெண் பிரதமர் இந்திராகாந்தி (1966).
8. முதல் பெண் காவல்துறை உயர் அதிகாரி கிரண்பேடி (1972).
9. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முதல் பெண் அன்னைதெரசா (1979).
10. எவரெஸ்டை சிகரத்தை அடைந்த முதல் இந்திய பெண் பச்சேந்திரி பால் (1984).
11. புக்கர் பரிசு வென்ற முதல் இந்திய பெண் அருந்ததி ராய் (1997).
12. முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாடீல் (2007).
13.மக்களவையின் சபாநயகர் பதவி வகித்த முதல் பெண் சபாநாயகர் மீராகுமார்(2009)
14. உச்ச நீதிமன்ற முதல் பெண் நீதிபதி மீராசாகீப் பாத்திமா பீவி
15. இந்திய தேசிய காங்கிரசின் முதல் பெண் தலைவர் அன்னிபெசன்ட்
16.இந்தியாவின் முதல் பெண் மாநில முதலமைச்சர் சுச்சித கிருபாளினி
17. முதல் பெண் காவல்துறை இயக்குநர் (DGP) காஞ்சன் சௌத்ரி பட்டாச்சாரியா.
18. இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத்துறை அமைச்சர் திருமதி.நிர்மலா சீத்தாராமன்
19.இந்தியாவின் முதல் பெண் நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன்
முதல் பெண் ஆசிரியர்
சாவித்ரிபாய் புலே, பாரம்பரியத்தை உடைத்த முதல் பெண்கள் பள்ளியின் முதல் பெண் ஆசிரியர் ஆவார். பெண்கள் கல்வியை பற்றி பேசும்போதெல்லாம் நினைவில் வருபவர், இந்தியாவில் பெண் கல்வியை செயல்வடிவமாக்கிய ஜோதிராவ்புலே. சாவித்ரிபாயின் கணவர் ஆவார். இவர்கள் இருவரும் பெண்களுக்கான முதல் பள்ளியை 1848 ஆம் ஆண்டு தொடங்கினர்.
உலகின் முதன்மை பெண்மணிகள்
- முதல் பெண் பிரதம மந்திரி - சிறிமாவோ பண்டாரநாயக - இலங்கை
- முதல் விண்வெளி வீராங்கனை - வாலென்டினா தெரேஷ்கோவா- சோவியத் ஒன்றியம்
- முதன் முதலில் எவரெஸ்ட் சிகரத்தை அளவிட்டவர் - ஐன்கோ தபே - ஜப்பான்
- ஒலிம்பிக்கில் தங்கம் வென்றவர் - சார்லோட் கூப்பர் - இங்கிலாந்து
