சேரர்
சங்க காலத்தின்போது மூவேந்தர்கள் தமிழகப் பகுதிகளைக் ஆட்சி புரிந்தனர். வேந்தர் எனும் சொல் சேரர், சோழர், பாண்டியர் ஆகியோரைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது. சேரர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மற்றும் வடக்குத் திருவிதாங்கூர், கொச்சி, தெற்கு மலபார், கொங்கு மண்டலம் ஆகியவற்றை ஆண்டனர். பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றன. சேர அரசன் செங்குட்டுவன் வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார். சிலப்பதிகாரக் காவியப் பாத்திரமான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டுவந்தார் எனத் தெரியவந்துள்ளது. பத்தினித் தெய்வ வழிபாட்டை அவர் அறிமுகம் செய்தார். சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பியாவார். சேரல் இரும்பொறை எனும் அரசன் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார். சில சேர நாணயங்களில் அவர்களின் சின்னமான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன.
முக்கியத்துவம் மிகுந்த சேர அரசர்கள்
- உதயன் சேரலாதன்
- இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்
- சேரன் செங்குட்டுவன்
- சேரல் இரும்பொறை
சோழர்
முக்கியத்துவம் வாய்ந்த சோழ அரசர்கள்
- இளஞ்சேட்சென்னி , கரிகால் வளவன், கோச்செங்கணான், கிள்ளிவளவன், பெருநற்கிள்ளி
பாண்டியர்
பாண்டியர் இன்றைய தென்தமிழகத்தை ஆட்சி செய்தனர். பாண்டிய அரசர்கள் தமிழ்ப்புலவர்களையும் அறிஞர்களையும் ஆதரித்தனர். பல பாண்டிய அரசர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
நெடுஞ்செழியன் மிகவும் புகழ்பெற்ற போர்வீரராகப் போற்றப்படுகிறார். அவர் சேரர், சோழர், ஐந்து வேளிர்கள் ஆகியோரின் கூட்டுப்படையைத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தோற்கடித்தார். அவர் கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுகின்றார்.
பாண்டிய நாடு முத்துக்குளிப்புக்குப் புகழ் பெற்றதாகும். பாண்டிய அரசர்கள் பல நாணயங்களை வெளியிட்டனர். அவர்களின் நாணயங்கள், ஒருபுறத்தில் யானையின் உருவத்தையும் மற்றொருபுறத்தில் மீனின் உருவத்தையும் கொண்டுள்ளன.
முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய அரசர் வேதவேள்விகளை நடத்தியதைக் கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார்.
முக்கியத்துவம் வாய்ந்த பாண்டிய அரசர்கள்
- நெடியோன் , நன்மாறன், முதுகுடுமிப் பெருவழுதி , நெடுஞ்செழியன்
மூவேந்தர்கள் சூட்டிக்கொண்ட பட்டங்கள்
சங்க காலத்தின்போது மூவேந்தர்கள் தமிழகப் பகுதிகளைக் ஆட்சி புரிந்தனர்.
மூவேந்தர்கள் எனும் சொல் சேரர், சோழர், பாண்டியர் ஆகிய மூவரைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது.
சேரர்கள்
- ஆதவன்
- குட்டுவன்
- வானவன்
- இரும்பொறை
சோழர்கள்
- செம்பியன்
- சென்னி
- கிள்ளி
- வளவன்
பாண்டியர்கள்
- மாறன்
- வழுதி
- செழியன்
- தென்னர்
மூவேந்தர்களின் அரசுரிமைச் சின்னங்கள்
செங்கோல் (scepter), முரசு (Drum), வெண்கொற்றக்குடை (white umbrella) ஆகியன அரசு அதிகாரத்தின் சின்னங்களாகும். அரசர் 'கோ' ('கோன்' என்பதன் சுருக்கம்) என அழைக்கப்பட்டார். வேந்தன், கோன், மன்னன், கொற்றவன், இறைவன் எனும் வேறு பெயர்களாலும் அரசர் அழைக்கப்பட்டார். பொதுவாக ஆட்சி புரிந்துகொண்டிருக்கும் அரசரின் மூத்தமகனே அடுத்து அரியணை ஏறினார். பட்டம் சூட்டப்படும் விழா 'அரசுக்கட்டிலேறுதல்' அல்லது முடிசூட்டுவிழா எனப்பட்டது. பட்டத்து இளவரசர் கோமகன் எனவும், அவருக்கு இளையோர் இளங்கோ, இளஞ்செழியன், இளஞ்சேரல் எனவும் அழைக்கப்பட்டனர்.
| மூவேந்தர் | மாலை | துறைமுகம் | தலைநகர் | சின்னம் |
| சேரர் | பனம்பூ | முசிறி / தொண்டி | வஞ்சி / கரூர் | வில், அம்பு |
| சோழர் | அத்திப்பூ | புகார் | உறையூர்/புகார் | புலி கொடி |
| பாண்டியர் | வேப்பம்பூ | கொற்கை | மதுரை | 2மீன்கள் |