சமயச்சார்பின்மை

அரசியலமைப்புப் பிரிவுகளின் அடித்தளம்

1976ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 42 வது சட்டத்திருத்தத்தின் மூலம் முகவுரையில் சமயச்சார்பற்ற என்ற சொல் சேர்க்கப்பட்டது.

இந்திய அரசியலமைப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ள சமய சுதந்திரம் நாட்டு குடிமக்கள் மட்டுமின்றி இந்தியாவில் வாழும் வெளிநாட்டவருக்கும் வழங்கப்படுகிறது. 

பிரிவு 15: சமயம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறப்பிடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்துவதைத் தடை செய்கிறது.
பிரிவு 16: பொது வேலை வாய்ப்பில் சமமான வாய்ப்பளித்தல்.
பிரிவு 25 (1): எந்த ஒரு சமயத்தினை ஏற்கவும், பின்பற்றவும், பரப்பவும் உரிமை வழங்குகிறது. 
பிரிவு 26 : சமய விவகாரங்களை நிர்வகிக்கும் சுதந்திரம்.
பிரிவு 27: எந்தவொரு குறிப்பிட்ட சமயத்தையும் ஆதரிக்க அரசானது எந்தவொரு குடிமகனையும் வரிசெலுத்துமாறு வற்புறுத்தக் கூடாது.
பிரிவு 28: சில கல்வி நிறுவனங்களில் மதம் சார்ந்து நடைபெறும் சமய போதனைகள் அல்லது சமய வழிபாடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் இருக்கும் உரிமை.
பிரிவு 29 (2): அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பாகுபாடு காட்ட தடை.


சமயச்சார்பின்மை- அரசியலமைப்புப் பிரிவுகளின் அடித்தளம்


இது 1954ல் நடைபெற்ற பம்பாய் மாநிலம் - ரத்திலால் பன்சந்த் வழக்கில் மேன்மைமிக்க உச்ச நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்டது.

ManiMegala


கட்டுரையாளர் பற்றி: மணிமேகலை
நான் கடந்த 5 ஆண்டுகளாக கல்வி சார்ந்த வலைப்பதிவுகளில் அனுபவம் பெற்றுள்ளேன். நானும் உங்களைப் போலவே இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகி, தேர்வுகளை எழுதி வருகிறேன்.
என்னுடன் இணையுங்கள்:
facebook  pinterest  youtube  whatsapp twitter instagram telegram

கருத்துரையிடுக

புதியது பழையவை