TNPSC group 4 and Vao | group 2 2a general studies important questions and answers
TNPSC பொது அறிவியல் முக்கியமான கேள்விகள் மற்றும் விடைகள்
1. ஒலிம்பியா ஜீயஸ் கோவில் எங்கு உள்ளது?
ஏதென்ஸ்
2. மகா அலெக்ஸாண்டரின் தலைமையின் கீழ் கிரேக்கர்கள் எங்கு ஒரு அரசை நிறுவினர்?
மாசிடோனியா
3. வடிவியல் (geametry) கணிதம் தொடர்பான அடிப்படைத் தேற்றங்களை முறைப்படுத்திய கிரேக்கர்?
யூகிளிட்
4. பூமியின் விட்டத்தைத் துல்லியமாகக் கணக்கிட்ட கிரேக்கர்?
எரோட்டோஸ்தனிஸ்
5. முக்கோணவியலைக் (Trigonometric) கண்டுபிடித்த கிரேக்கர்?
ஹிப்பார்கஸ்
6. ஹிப்பார்கசின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டு கோள்களும் நட்சத்திரங்களும் எவ்வாறு நகர்கின்றன என்பது குறித்த ஒரு மாதிரி அமைப்பை உருவாக்கிய கிரேக்கர்?
டாலமி
7. அளவில் மிகப்பெரிதான அறிவியல் கலைக் களஞ்சியத்தை எழுதி அதை இயற்கை வரலாறு (Natural History) என அழைத்தவர்?
பிளினி
8. சீனாவிற்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பி ஒரு ஆசிய நாட்டுடன் தொடர்பை ஏற்படுத்திய முதல் ரோமானியப் பேரரசர்
மார்க்கஸ் அரிலியஸ்
9 . சீனாவில் ஹன் அரசவம்சம் நிறுவியவர்
லீயு-பங்
10. பட்டுப்பாதை பட்டுச் சாலை/ பட்டு வழித்தடம் என்று அறியப்படுவது
சீனாவிலிருந்து ஆசியா மைனர் மற்றும் இந்தியா வரையிலான வணிக வழித்தடம்
11. யார் ஆட்சியின் போது தான் பௌத்தம் இந்தியாவிலிருந்து சீனாவுக்கு வருகை தந்தது?
ஹன்வம்சம்
12. கான்ஸ்டாண்டிநோபிள் நகரை உதுமானிய துருக்கியர் கைப்பற்றியபோது இத்தேவாலயம் ஒரு மசூதியாக மாற்றப்பட்டது?
புனித சோபியா ஆலயம்
13. கான்ஸ்டாண்டிநோபிள் நகரை உதுமானிய துருக்கியர் கைப்பற்றிய ஆண்டு
1453
14. ஏசு சிலுவையிலறைந்து கொல்லப்பட்டபின் யார் கிறித்தவமதக் கொள்கைகளைப் பரப்பத் தொடங்கினார்?
புனித பால்
15. யார் அவைக்கு குஷாணர்கள் ஒரு தூதுக்குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது?
அகஸ்டஸ் சீசர்
16. சங்ககாலம் என்பது
கி.மு (பொஆமு)-3ம் நூற்றாண்டு முதல் கி.பி.(பொது) -3ம் நூற்றாண்டு வரை
17. பதினெண் மேல்கணக்கு என்றழைக்கப்படும் சங்க இலக்கியங்கள்
பத்துப்பாட்டும் எட்டுத்தொகையும்
18. இந்தியாவின் முதல் சமயச் சார்பற்ற இலக்கியம் என போற்றப்படுகிறது.
சங்க இலக்கியம்
19. கிரேக்கர்களின் மற்றொரு பெயர்
ஹெலினியர்கள்
20. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்குக் காரணமாக இருந்த ரோமானிய ஆளுநர்
போன்டியஸ் பிலாத்து