TNPSC 9ம் வகுப்பு - சமூக அறிவியல் - வரலாறு - அலகு 6 - இடைக்காலம்

ரோமானியப் பேரரசு கி.பி. (பொ.ஆ) -476 இல் வீழ்ச்சியடைந்தது கி.பி. (பொ.ஆ)-1453இல் கான்ஸ்டாண்டிநோபிள் நகரைத் துருக்கியர் கைப்பற்றினர். இவ்விரு முக்கிய நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியை வரலாற்று அறிஞர்கள் இடைக்காலம் என அழைக்கின்றனர்.

TNPSC group 4 and Vao | group 2 2a general studies  important questions and answers




TNPSC பொது அறிவியல் முக்கியமான கேள்விகள் மற்றும் விடைகள் 

1. சீனப்பெருஞ்சுவரின் மொத்த நீளம் 

6700 கிலோ மீட்டர்

2. ஜப்பானின் முன்னாள் பெயர் 

'யமட்டோ'

3.  ஜப்பானின் பூர்வ குடிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றனர்?

அய்னஸ் அல்லது அபாரிஜின்கள்

4. ஜப்பானியர்களின் பூர்வீக மதம் 

ஷின்டோ 

5. ஜப்பானியர்களின் பூர்வீக மதம் ஷின்டோ என்பது 

இயற்கை மற்றும் மூதாதையர் வழிபாடு ஆகிய இரண்டும் கலந்ததது

6. இஸ்லாமைத் தோற்றுவித்தார்

நபிகள் நாயகம் (முகமது நபி) 

7. கி.பி. (பொ.ஆ) -622இல் மெக்காவை விட்டு நபிகள் இடம்பெயர்ந்த நிகழ்வு 

ஹிஜிரா (Hijrah) 

8. கி.பி. (பொ.ஆ) -622இல் மெக்காவை விட்டு நபிகள் இடம்பெயர்ந்த இடம்

எத்ரிப்

9. நபிகள் நாயகம் வருகையைச் சிறப்பிக்கும் வகையில் எத்ரிப் நகர மக்கள் தங்கள் நகரத்திற்கு என்னப் புதுப்பெயர் சூட்டினர் ?

மதினாட்- உன்-நபி (மெதினா)

10. நபிகள் நாயகத்தின் நகரம்

மதினாட்- உன்-நபி  (மெதினா)

11. அரேபிய மத மற்றும் அரசியல் தலைவர் என்பவர்

கலீஃபா

12. இஸ்லாமியப் பேரரசின் உருவாக்கத்திற்கு அடித்தளமிட்ட இருவர்

அபுபக்கர், ஒமர்

13. இஸ்லாமின் இருபிரிவுகள்

சன்னி, ஷியா

14. அரேபிய இரவுகளின் நகரம்

பாக்தாத்

15. கி.பி. (பொ.ஆ.) 1095 இல் கிறித்தவர்களுக்கும் இஸ்லாமியர்களுக்குமிடையே தொடங்கிய எப்போரட்டம் ஏறத்தாழ 200 ஆண்டுகள் தொடர்ந்தன?

சிலுவைப் போர்கள்

16. பாக்தாத் நகரம் மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு அழிவுக்கு உள்ளான ஆண்டு

 கி.பி. (பொ.ஆ)1258

17. பாக்தாத் நகரம் மங்கோலியர்களால் கைப்பற்றப்பட்டு அழிவுக்கு உள்ளாவதற்கு காரணமானவர்

செங்கிஸ்கான் 

18. யாரால் ஹன் இனத்தவர்களது ஆட்சி இந்தியாவில் முடிவுக்கு வந்தது?

மாளவத்தைச் சார்ந்த யசோதர்மன்

19. மாகாராஷ்டிரத்தை உள்ளடக்கிய சாளுக்கிய அரசின் தலைநகர் 

பாதாமி

20. "சாளுக்கியர்கள் நன்றி உணர்வு மிக்கவர்களாகவும், போரில் ஈடுபடுவதை பெருமையாகவும், குற்றங்களுக்கு கடுமையான தண்டனை வழங்குபவர்களாகவும் திகழ்ந்தார்கள்" என்றவர்

யுவான் சுவாங்

21. அராபியர் வளர்த்தெடுத்த கட்டடக்கலை 

சாரசனிக் கட்டடக்கலை

22. புனித நகரம் 

ஜெருசலேம் 

23. சிலுவைப் போர்களுக்குக் காரணமானது

ஜெருசலேமை செல்ஜுக் துருக்கியர்கள் கைப்பற்றியது


ManiMegala


கட்டுரையாளர் பற்றி: மணிமேகலை
நான் கடந்த 5 ஆண்டுகளாக கல்வி சார்ந்த வலைப்பதிவுகளில் அனுபவம் பெற்றுள்ளேன். நானும் உங்களைப் போலவே இந்தத் தேர்வுகளுக்குத் தயாராகி, தேர்வுகளை எழுதி வருகிறேன்.
என்னுடன் இணையுங்கள்:
facebook  pinterest  youtube  whatsapp twitter instagram telegram

கருத்துரையிடுக

புதியது பழையவை