இந்திய வரலாற்றின் இடைக்காலம் கி.பி.(பொ.ஆ.) 7ஆம் நூற்றாண்டு முதல் (ஹர்ஷ- சாளுக்கியப் பேரரசுகளின் காலம்) 16ஆம் நூற்றாண்டில் மொகலாயப் பேரரசின் தொடக்கம் வரை எனவும்,
கி.பி. (பொ.ஆ.) 16ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. (பொ.ஆ) 18ஆம் நூற்றாண்டு வரை நவீன காலத்தின் தொடக்கம் எனவும் வரையறை செய்யப்படுகிறது.
TNPSC group 4 and Vao | group 2 2a general studies important questions and answers
TNPSC பொது அறிவியல் முக்கியமான கேள்விகள் மற்றும் விடைகள்
1. பாபர் இப்ராஹிம் லோடியை தோற்கடித்த ஆண்டு
1526
2. மேலைக்கடற்கரையில் போர்ச்சுகீசியர்கள் வந்திறங்கிய ஆண்டு
1498
3. முஸ்லிம்கள் ஆட்சி, 12ஆம் நூற்றாண்டின் இறுதியில் யாரால் டெல்லியில் நிறுவப்பட்டது?
முகமது கோரி
4. அலாவுதீன் கில்ஜியால் கைப்பற்றப்பட்டு 'தௌலதாபாத்' என மறுபெயர் சூட்டப்பெற்ற நகரம்
தேவகிரி (அவுரங்காபாத்திற்கு அருகில்)
5. கி.பி. (பொ.ஆ.) 1347இல் பாமினி சுல்தானியத்தை உருவாக்கியவர்
அலாவுதீன் பாமான்ஷா
6. "கங்கையும், கடாரமும் கொண்ட சோழன்" எனும் பட்டத்தைப் பெற்றவர்
முதலாம் இராஜேந்திரன்
7. சோழ பேரரசு யார் காலத்தில் கீழைச் சாளுக்கிய அரசோடு திருமண உறவுகள் மேற்கொள்ளப்பட்டது
முதலாம் குலோத்துங்கன்
8. கடைசி சோழப் பேரரசர்
மூன்றாம் இராஜேந்திரன்
9. விஜயநகர அரசை நிறுவியவர்
ஹரிஹரர் மற்றும் புக்கர்
10. சங்கம வம்சத்தின் முதல் அரசர்கள்
ஹரிஹரர் மற்றும் புக்கர்
11. துங்கபத்ரா நதியின் தென்கரையில் புதிய தலைநகர் ஒன்றை உருவாக்கி அதற்கு விஜயநகரம் (வெற்றியின் நகரம்) எனப் பெயர் சூட்டியவர்கள்
ஹரிஹரர் மற்றும் புக்கர்
12. விஜயநகர அரசின் வம்சத்தை வரிசைபடுத்தவும்
1.சங்கமம் 2.சாளுவம் 3.துளுவம் 4.ஆரவீடு
13. விஜயநகர அரசர்களுள் மாபெரும் அரசரான கிருஷ்ணதேவராயர் இவ்வம்சத்தைச் சேர்ந்தவராவார்
துளுவம்
14. தலைக்கோட்டைப் போர் நடைபெற்ற ஆண்டு
1565
15. தலைக்கோட்டைப் போரில் தக்காண சுல்தான்களின் கூட்டுப்படையினர் யாரை தோற்கடித்தனர்?
விஜயநகரப் பேரரசை
16. மொகலாயப் பேரரசை நிறுவியவர்
பாபர்
17. முதலாம் பானிபட் போர் நடைபெற்ற ஆண்டு
1526
18. பானிபட் போர்க்களத்தில் இப்ராகிம் லோடியை வெற்றி கொண்ட மொகலாய அரசர்
பாபர்
19. கடைசி மொகலாயப் பேரரசர்
ஔரங்கசீப்
20. 1503இல் போர்ச்சுக்கீசியர்கள் எங்கு தங்கள் முதல் கோட்டையைக் கட்டினர்?
கொச்சி
21. வாஸ்கோடகாமா, தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் சுற்றிக் கொண்டு கேரளக் கடற்கரையை வந்து அடைந்த ஆண்டு
1498
22. 1498இல் வாஸ்கோடகாமா எந்த கேரளக் கடற்கரையை வந்தடைந்தார்?
கள்ளிக்கோட்டை
23. யாருடைய காலம் தமிழ்நாட்டு வரலாற்றில் செழிப்புமிக்க காலமாகும் ?
சோழர்கள்
24. பிராமணர்களுக்கு மானியமாக வழங்கப்பட்ட வரிவிலக்கு அளிக்கப்பட்ட கிராமங்கள்
பிரம்மதேயம்
25. விஜய நகர அரசால் தமிழ்நாட்டின் பல்வேறு மையங்களில் பணியமர்த்தப்பட்ட இராணுவ அதிகாரிகள்
நாயக் அல்லது நாயக்கர்
26. விஜயநகரப் பேரரசுக்கு விசுவாசமான மூன்று முக்கிய நாயக்க அரசுகள்
மதுரை, தஞ்சாவூர், செஞ்சி
27. மகாராஷ்டிரத்தில் விதோபாவின் பக்தர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம்
வர்க்கரி சம்பிரதயா
28. தூத்துக்குடிப் பகுதியில் வாழும் பரதவ சமூக (மீன் பிடிக்கும் சமூகம்) மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுவதற்கு கருவியாக இருந்தவர்
புனித பிரான்சிஸ் சேவியர்
29. மதுரையில் மக்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுவதற்கு காரணமாக இருந்தவர்
ராபர்ட் டி நொபிலி
30. சீக்கிய மதம் யாரால் தோற்றுவிக்கப்பட்டது?
குருநானக்
31. கம்பர் தமிழில் இராமாயணத்தை எழுதி, அதை முறைப்படி எந்த கோவிலில் அரங்கேற்றம் செய்தார்?
ஸ்ரீரங்கம்
31. சேக்கிழாரின் பெரியபுராணம் எந்த கோவிலில் அரங்கேற்றம் செய்யப்பட்டது?
சிதம்பரம்
32. இந்துஸ்தானி இசையில் புகழ்பெற்று விளங்கியவர்?
தான்சேன்
33. பிரபந்தம் எனப்படும் ஒரு புதிய வகைத் தமிழ் இலக்கியம் இக்காலத்தில் உருவானது.
விஜயநகர நாயக்கர்கள்
34. கர்நாடக இசைக்குரிய ராகங்களை வகைப்படுத்தியவர்?
கோவிந்த தீட்சிதரின் மகன் வேங்கட மகி
35. ஐரோப்பியருடைய வருகைக்குப் பின்னர் புதிய பயிர்களாக அறிமுகமாயினவை
சோளமும் புகையிலையும்
36. இந்தியாவில் பயிரிடப்பட்ட முக்கியமான சாயப் பயிர்
அவரி
37. சிவப்பு வர்ணத்திற்காக பயன்படுத்தப்பட்டது ......... என்னும் தாவரத்தின் வேர்
சாய்
38. இங்கிலாந்து அரசர் ஜான் மற்றும் இந்தியாவை ஆண்ட சுல்தான் ........... இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்.
இல்டுமிஷ்
39. பொருத்துக (பொருத்தபட்டுள்ளது)
புலிகாட் (பழவேற்காடு)- டச்சுக்காரர்கள்
மெட்ராஸ் (சென்னை) - ஆங்கிலேயர்கள்
பாண்டிச்சேரி - பிரெஞ்சுக்காரர்கள்
தரங்கம்பாடி - டேனியர்கள்
40. பாமினி சுல்தானியத்தின் தலைநகர்
பிடார்
